படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க!
நாக்கில் சனி!
மனைவி: நான் இறந்து விட்டால் நீங்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்வீர்களா?
கணவன்: கண்டிப்பாக மாட்டேன்!
மனைவி: ஏன்? மணமானவராக இருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி தானே?
கணவன்: நிச்சயமாக, அதிலென்ன சந்தேகம்?
மனைவி: பின் ஏன் மறுமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?
கணவன்: சரி! செய்து கொள்கிறேன்.
மனைவி: ஓஹோ, அப்படியா? (ஒரு அடிபட்ட பார்வையுடன்!)
கணவன்: (சத்தமான பெருமூச்சும், கவலையும்!)
மனைவி: நம் வீட்டில் தான் வாழ்வீர்களா?
கணவன்: ஆம், இது நல்ல வீடு தானே.
மனைவி: அவளுடன் நம் மெத்தையில் தான் படுத்து உறங்குவீர்களா?
கணவன்: பின் வேறெங்கு உறங்குவது?
மனைவி: என் காரை அவள் ஓட்ட அனுமதிப்பீர்களா?
கணவன்: அனுமதிக்கலாம், அது புதுசு தானே!
மனைவி: இவ்வீட்டில் இருக்கும் என்னுடைய புகைப்படங்களை எடுத்து விட்டு அவளுடையதை மாட்டுவீர்களா?
கணவன்: அதில் பெரிய தவறொன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை.
மனைவி: என் கோல்ப்· (GOLF) குச்சிகளை அவள் பயன்படுத்துவாளா?
கணவன்: மாட்டாள், அவள் இடது கைப்பழக்கம் உடையவள்!
மனைவி: (புயலுக்கு முன்னே அமைதி!!!)
கணவன்: ஐயோ, தெய்வமே!!!
நேர்முகத் தாக்குதல்!
இது ஒரு பெண் பேட்டியாளருக்கும் ஒரு அமெரிக்க ராணுவ தளபதிக்கும்(Marine Corps General) இடையே, அவர், ஒரு சிறுவர் சீரணிக் குழுவுக்கு தன்னுடைய ராணுவ முகாமை பார்வையிடவும், அங்கு தங்கவும் அனுமதி அளித்ததை ஒட்டி, நடந்த வானொலி உரையாடல்.
பெண் பேட்டியாளர்: தங்கள் முகாமுக்கு வருகை தரும் இச்சிறுவர்களுக்கு நீங்கள் என்னென்ன கற்றுத் தர உள்ளீர்கள்?
ஜெனரல்: அவர்களுக்கு, மலையேறுதல், அம்பு எறிதல், படகோட்டுதல், துப்பாக்கி சுடுதல் ஆக்கிவற்றில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
பெண் பேட்டியாளர்: துப்பாக்கி சுடுதலா? இது சற்று பொறுப்பில்லாத செயலாகத் தோன்றுகிறதே!
ஜெனரல்: இல்லையே, எனது பயிற்சியாளர்கள் சரியாக மேற்பார்வை செய்யக் கூடியவர்கள் என்பதால், கவலையன்றும் இல்லை.
பெண் பேட்டியாளர்: ஆனால், சிறுவர்களுக்கு இது மிகவும் ஆபத்தான ஒரு பயிற்சி என்பதை நீங்கள் உணரவில்லையா?
ஜெனரல்: நீங்கள் கூறுவது தவறு! அச்சிறுவர்கள் முதலில், சுடுவதற்கான சரியான கட்டுப்பாட்டை கற்றுக் கொண்ட பின் தான், துப்பாக்கியைத் தொடவே அனுமதி தரப்படும்.
பெண் பேட்டியாளர்: ஆனால், பிற்காலத்தில் அச்சிறுவர்கள் கொடிய கொலைகாரர்கள் ஆவதற்கு நீங்கள் தயார் செய்வது போல் அல்லவா இது தெரிகிறது!?!?
ஜெனரல்: நீங்கள் கூட பார்ப்பதற்கு, ஒரு விபசாரி ஆவதற்குரிய தகுதிகளுடன் காணப்படுகிறீர்கள்! ஆனால், அப்படி ஆகி விட்டீர்களா என்ன?
வானொலியில் நீண்ட அமைதி, பேட்டியும் முடிந்தது!!!
0 மறுமொழிகள்:
Post a Comment